உடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அறை கதவு: போலீஸ் தீவிர விசாரணை!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:12 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தனர். இந்நிலையில் அங்கு ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் சுமார் 500 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்தார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிஷன் பகதூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா அறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த மூன்று பெட்டிகள் உடைக்கப்பட்டதாகவும் அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. காவலாளியை கொலை செய்தவர்கள் அந்த ஆவணங்களை திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்