இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 23 ஆம் தேதி நாகை மீனவர்கள் உள்பட 29 பேரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். இதனால், அவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில், விரைவாக நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.