ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக்க தடையில்லை - நீதிமன்றம்

புதன், 15 ஜூலை 2020 (14:24 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்ற தடை யில்லை  என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை. இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என ஒருசாரார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா மற்றும்  அவரது சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற் நீதிபதி  சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக  மாற்ற தடையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக்கும் முயற்சியில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.

அத்துடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்