ஸ்டாலினிடம் பேச ஜெயலலிதாவுக்கு தைரியம் இல்லை: கனிமொழி அதிரடி
புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:51 IST)
ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச ஜெயலலிதாவுக்கு தைரியம் இல்லை என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”காவல்துறை மானிய கோரிக்கையின் போது திமுக உள்ளே இருக்கக் கூடாது என்பதற்காக தான் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச தைரியம் இல்லை.
திமுக உறுப்பினர்களை சட்டசபையில் வைத்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்க வேண்டும். எல்லோரையும் வெளியேற்றிவிட்டு விமர்சனம் செய்வதால் என்ன பயன்?
கருணாநிதி சட்டசபைக்கு வரவேண்டும் எனக் கூறும் ஜெயலலிதா, கருணாநிதியின் வாகனம் வருவதற்கான வழி முறைகளை செய்ய தயாராக இல்லை. இதனால் சவால் விடுவதில் அர்த்தம் இல்லை” என்று கூறியுள்ளார்.