ஜெ. மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 470 பேருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: அதிமுக அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (12:47 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சி தாளாமல் பலரும் கதறி அழுததோடு, உயிரிழப்பதும் தொடர்கதையாகியுள்ளது. இதுவரை 470 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 
இதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்த 470 பேரின் குடும்பத்துக்கு அதிமுக தலைமைக்கழகம் நிதியுதவி அறிவித்துள்ளது. 
 
இதுவரையிலும் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் இதுவரை சுமார் 470 பேர் உயிரிழந்ததாக அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரையில்