சர்வாதிகார ஜெயலலிதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:26 IST)
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மனோவை ஆதரித்து பேசிய குஷ்பு, சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.


 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, வேட்பாளர் மனோவை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரதை நேற்று மாலை தொடங்கினார்.
 
அப்போது அவர் பேசியதாவது; மக்களை நேரடியாக சந்திக்காத முதல்வர், தேர்தல் பிரச்சாரத்தில் காவல் துறை பாதுகாப்புடன் மக்களை ஆடு, மாடு போல் அடைத்து வைக்கின்றார், தனது கட்சி அமைச்சர்கள் போல், மக்களையும் அடிமையாக நடத்த வேண்டுமென நினைக்கிறார், என்று கூறினார்.
 
மேலும், சர்வாதிகார ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மக்கள் யாரை தேர்ந்தெடுப்பது என தெளிவாக உள்ளனர் என்றும் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்