ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதா? - மருத்துவர்கள் விளக்கம்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:44 IST)
மறைத்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரின் கால்கள் அகற்றப்படவில்லை என அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


 

 
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை தற்போது சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
 
அப்போது, ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டனவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. ஆதாரமில்லாத வதந்திகளை சிலர் பரப்பி விட்டனர்” என அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்