முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மத்தை விசாரணை செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்திற்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஆணையரின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஆறுமாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.