பின் இந்த அதிரடி படை வீரப்பனை தொடர்ந்து கண்கானித்து வந்த நிலையில் தர்மபுரிக்கு அருகே வைத்து வீரப்பன், அவருடைய கூட்டாளிகளான சந்தன கவுடா,மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் சுடப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது வீரப்பனுடன் இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களான கோவிந்தராஜ், நாகராஜ்,அன்றில்,முத்துச்சாமி,கல்மண்டி ராமன்,மாறன்,சத்யா,அமிர்தலிங்கம்,ரமேஷ் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்சேட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது தகுந்த ஆதாரங்கள் மற்றும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சுட்டிகாட்டியதுடன், பிணைத்தொகை கேட்கும் ஆடியோ கேஸட் போன்றவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, போலீஸார் காலதமதமாகவே பிற ஆதாரங்களையும் சமர்பித்தனர் என கூறியிருந்தார்.