எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அவமானப்படுத்திய திமுகவுடன் தினகரன்; ஜெயக்குமார் விளாசல்

புதன், 20 செப்டம்பர் 2017 (13:31 IST)
சட்டசபையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்த திமுக ஜனநாயகப் படுகொலை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 

 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
திமுக முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையில் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை செய்த திமுக, எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் ஜனநாயகப் படுகொலை என சொல்வது வேடிக்கையாக உள்ளது.
 
ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்று ஸ்டாலினும், தினகரனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள். யார் யாருடன் சேர்ந்தாலும் எந்த கொம்பனாலும் ஆட்சியை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. ஸ்டாலினும், தினகரனும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்