பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகள்; ஒன்றிணைக்கும் திமுக

புதன், 20 செப்டம்பர் 2017 (12:02 IST)
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.  


 

 
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆட்சிக்கு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒரே அணியாக ஒன்று திரண்டு உள்ளன. கடந்த மாதம் 27ஆம் தேதி லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். அதில் 18 கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். 
 
அதேபோல் தற்போது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். திமுக நடத்தும் இந்த பொதுக்கூட்டத்தில் லல்லு பிரசாத யாதவ், மம்தா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
 
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பீகார் அடுத்து மேற்கு வங்கத்தில் பேரணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் திமுக சார்ப்பில் பாஜகவுக்கு எதிராக பேரணி நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்