ஆட்சிக்கும் ஆட்சிக்கும் உறவு உண்டு கட்சிக்கும் கட்சிக்கும் உறவு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (14:55 IST)
பாஜகவின் பார்வைக்கு ஏற்கி கிடந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

 
தமிழகத்தில் அதிமுக ஆட்சி இல்லை பாஜகவின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என எதிர்கட்சிகள் உள்பட பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்து அவர்கள் சொல்வதை எல்லாம் அதிமுக அரசு செய்து வருகிரது என குற்றச்சாட்டும் உள்ளது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு கூறியதாவது:-
 
பாஜகவின் பார்வைக்கு ஏங்கி கிடந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார்கள். எங்கள் ஆட்சிக்கும் ஆட்சிக்கும் உறவு உண்டு. கட்சிக்கும் கட்சிக்கும் உறவு இல்லை என்றால் அதை விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்