ஊழலுக்காக மீண்டும் கலைக்கப்படும் ஆட்சியாக திமுக இருக்கும்; ஜெயக்குமார்

புதன், 21 ஜூன் 2023 (12:09 IST)
ஊழலுக்காக கலைக்கப்படும் ஆட்சியாக மீண்டும் திமுக ஆட்சி இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். 
 
செந்தில் பாலாஜி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். 
 
சவுக்கு சங்கர் உள்பட ஒரு சில அரசியல் விமர்சகர்கள் திமுக ஆட்சி கலைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி அதிமுக நடத்திவரும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். 
 
இந்த போராட்டத்தின் போது அவர் பேசிய போது ’அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் என்றும் ஊழலுக்காக மீண்டும் அழைக்கப்படும் ஆட்சியாக திமுக இருக்கும் என்றும் தேசிய உள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்