ஜெயக்குமார் கொலை வழக்கு.! தனிப்படை போலீசார் திணறல்..! சிபிசிஐடிக்கு மாற்றம்...!!

Senthil Velan

வியாழன், 23 மே 2024 (13:06 IST)
நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ம் தேதி மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவர் சடலமாக அமைக்கப்பட்டார். இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான 10 தனிப்படைகள் விசாரித்து வருகின்றன.
 
ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து துப்பு துலுக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

ALSO READ: ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்..! பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்..!!
 
இந்நிலையில் ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சிபிசிஐடி அதிகாரியாக உலகராணி என்பவரை நியமனம் செய்து டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்