கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை - ஜெயக்குமார் பேட்டி

புதன், 21 பிப்ரவரி 2018 (11:39 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

 
அந்நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “பருவநிலை மாறும் போது சில பூக்கள் மலரும். பின் உதிர்ந்து விடும். திமுக என்ற பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
இன்று மாலை கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கவுள்ள நிலையில், காகிதப் புக்கள் மணக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர் “நான் பூ அல்ல! விதை! என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள்.. வளர்வேன்..” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “கமல்ஹாசன் புரியாத மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை. அது உதவாது. அந்த விதை இந்தியாவில் பயன்படுத்தப்படுவதில்லை. கமல்ஹாசன் விவகாரத்தில் காதிகப் பூக்கள் மணக்காது என்ற கருத்தில் உடன்படுகிறேன்” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்