ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு: கொளுத்தி போடும் சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (16:36 IST)
தமிழர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நிதியுதவி வழங்கியது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தான் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


 
 
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்க மாணவர், இளைஞர் சமுதாயம் ஒரு புரட்சி போராட்டமே நடத்தியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து பொறுக்கிகள், ஜிகாதிகள், நக்சல்கள் என கூறி வசைபாடி வந்தார்.
 
இதனால் தமிழகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, சென்னையில், நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தேச விரோத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிதி உதவி செய்தது.
 
இதன் காரணாமாகத்தான் நேற்று திடீரென சென்னையில் கலவரம் வெடித்தது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில் போராட்டத்தை தொடர்ந்தவர்கள் தங்கள் கைகளில் பிரபாகரன், ஹபீஸ் சையது (லஷ்கர் இ தொய்பா) போட்டோக்களை வைத்திருந்தனர் என மாணவர்கள், இளைஞர்களின் அற வழியிலான புனிதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்