பெண் தோழியுடன் வந்த ஐடி ஊழியர்.. ஸ்டார் ஓட்டலில் நிர்வாணமாக சுற்றியதால் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (11:03 IST)
பெண் தோழியுடன் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு வந்த ஐடி ஊழியர் ஒருவர் திடீரென நிர்வாணமாக மற்றவரின் அறைகளின் கதவை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் இளைஞர் ஒருவர் தனது பெண் தோழியுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த இளைஞர் நிர்வாணமாக பக்கத்து அறைகளில் உள்ள கதவை தட்டியதாக தெரிகிறது. 
 
அந்த அறையில் உள்ளவர்கள் திறந்து பார்த்து அவர் நிர்வாணமாக இருப்பதை  பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகிகள் அந்த இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
 
காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரித்த போது அவர் ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருவதாகவும் அவர் இரண்டு நாட்களாக பெண் தோழியுடன் அந்த ஹோட்டலில் அதை எடுத்து தங்கி இருப்பதாகவும் தெரிய வந்தது. மேலும் அவர் அளவுக்கு அதிகமான போதையில் நிர்வாணமாக மற்றவர்களின் அறையை தட்டியதாகவும் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்