கருப்பு பணம் ஒழிப்பு, வரி ஏய்ப்பு போன்றவற்றை கண்டுபிடிக்க நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 76 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில் சுமார் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்த குழுமத்துக்கு சொந்தமான வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், கிரசண்ட் பொறியியல் கல்லூரி, மீனம்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ் கார் ஷோரூம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புகாரி டவர், மயிலாப்பூர் சிட்டி சென்டர், அப்துல் காதீர் உறவினரின் சொகுசு பங்களா ஆகிய இடங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததும், நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் வருமானவரித் துறையினர் 2 சூட்கேஸ்களில் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம், நகை கைப்பற்றப்பட்ட விபரம் குறித்து கேட்ட போது, எவ்வித தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர். 2 சூட்கேசுகளில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள், பணம், நகை இருக்கலாம் என கூறப்படுகிறது.