தீபாவளிக்கு பலத்த மழை : வானிலை மையம் எச்சரிக்கை

வியாழன், 27 அக்டோபர் 2016 (15:15 IST)
கிராண்ட் புயல் காரணமாக, தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


 

 
இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறும்போது “வங்கக் கடலில் உருவான கியாண்ட் புயல் மியான்மர் நோக்கி திரும்பியது. தற்போது அந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. பலவீனம் அடைந்து கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. 
 
எனவே, இப்புயல் காரணமாக, சென்னை உட்பட தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
அதேபோல் வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். மேலும், கடலோர மாவட்டங்களில் கன மழையும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்