ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது - ஹெச்.ராஜா

Webdunia
சனி, 23 மே 2020 (22:36 IST)
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து  கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது.


விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கபட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்

இந்த நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் கோரியும் தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து ஹெச்ராஜா இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேடியளித்துள்ளார். அதில், பட்டியல் சமூகதின் மீது நவீன தீண்டாமை உள்ளது. திமுக தமிழகத்தின்கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒளிக்காமல் தமிழகத்தில் எந்தச் சமூகமும் முன்னேற முடியாது அந்தளவுக்கு மோசமான தீயசக்திகள்.

ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.ஏனென்றால் முரசொலை அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்