இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரையில் இதுவரை திராவிட கட்சிகளின் கையே ஓங்கியிருந்தது. தேசிய கட்சியாக இருந்தும் காங்கிரஸ் ஏதாவது ஒரு திராவிட கட்சி கொடுக்கும் சீட்டுக்களை மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கும் கொள்ளும் நிலையே இதுவரை இருந்தது. ஆனால் இனி திராவிட கட்சிகள் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாஜக எப்படி அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதோ அதேபோல் திமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் அதற்கு முதலில் தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து இன்று கருத்து கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 'தமிழக காங்கிரஸில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை ராகுல்காந்தி தான் அறிவிப்பார் என்று தெரிவித்தார். மிகவிரைவில் புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு வெளிவரும் என கருதப்படுகிறது.