3 மாதமாக தனியார் நிறுவனம் சம்பளம் தரலை! - கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

Prasanth K

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (10:00 IST)

கடலூரில் தனியார் ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

சென்னையில் தூய்மை பணிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், தனியார்மயமாவதால் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து சென்னை மாநகராட்சி விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. ஆனால் அதை பணியாளர்கள் ஏற்க மறுத்து போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் கடலூரில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் ஏற்கனவே தனியார் ஒப்பந்ததாரரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூய்மை பணியாளர்கள் தனியாருக்காக பணியாற்றி வருகிறார்கள்.

 

45 வார்டுகளில் தனியார் மூலமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் கடந்த 3 மாதங்களாக தனியார் ஒப்பந்த நிறுவனம் சம்பளம் தரவில்லை என மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் தூய்மை பணியாளர்கள். 

 

தொடர்ந்து சென்னை, கடலூர் என தூய்மை பணியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்