நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் பெரும்பாலான குற்றச்சாட்டு சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் இருந்து நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர் ஆனால் உண்மையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பிரபல ஊடகம் ஒன்று ஆய்வு செய்ததில் இந்த ஆய்வின் முடிவில் தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 97 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் எப்படி 97 சதவீதக் கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் கேள்விகளில் 180 ற்கு 177 கேள்விகள் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருப்பதாக சிலர் அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு எண்ணை எழுதிவிட்டு நீட் ஒன்றும் சிரமமில்லை என்பதாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் பொய் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
இந்த மாபெரும் உருட்டினை முன் வைத்தும் சில கேள்விகளைக் கேட்போம்.