நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக வெற்றி அடைந்தபோதிலும், தமிழகம் மற்றும் கேரளாவில் மண்ணை கவ்வியது. குறிப்பாக தமிழகத்தில் வலுவான கூட்டணி இருந்தும் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாததது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை செளந்திரராஜனை மாற்ற அமித்ஷா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எஸ்வி சேகர், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஜிகே வாசனின் தமாக கலைக்கப்பட்டு பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாகவும், அதற்கு கைமாறாக அவருக்கு பாஜக தமிழக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை என்று வாசன் தரப்பினர் உறுதி கூறியுள்ளனர். பாஜகவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ஜிகே வாசனுக்கு நெருக்கமான ஒரு தலைவர் தெரிவித்துள்ளார்.