உத்தரபிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்த சமாஜ்வாதி கட்சியும் - பகுஜன் சமாஜ் கட்சியும், நடைபெற்றுமுடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன.இந்தக் கூட்டணி கங்கிரஸுக்கு ஆதரவாக இருந்ததோ இல்லையோ ஆனால் பாஜகவை எதிர்த்துப் படு தீவிரமாக களமிறங்கினர். ஆனால் பாஜக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி ஆட்சியைப் பிடித்தது.