தமிழக சட்டசபை தேர்தலின்போது பெரிய மாற்றம் வரும்: ஜேபி நட்டா

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:20 IST)
தமிழக சட்டசபை தேர்தலின் போது மிகப்பெரிய மாற்றம் வரும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 
 
இன்று கோவை வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் வரவேற்றனர். அதன்பிறகு அவர் கட்சியினர் மத்தியில் அவர் பேசியபோது  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் இந்தியா வலிமையுடன் முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும் நம்பிக்கையுடன் அந்த மாற்றத்தை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை பார்த்து உலகமே வியந்து பாராட்டி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்