நீ இந்தியன் தானா? தினகரனை நோக்கி பாயும் கேள்வி: தினகரன் மழுப்பல் பதில்!!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (10:03 IST)
ஆர்.கே.நகரில் போட்டியிடும் டிடிவி தினகரன் இந்திய நாடு குடிமகனா அல்லது சிங்கப்பூர் நாட்டு குடிமகமா என்ற குழப்பத்திற்கு பதுலளித்து உள்ளார் தினகரன். 


 
 
1996 ஆம் ஆண்டு காஃபிபோசா சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஒரு ரிட் மனுவை டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்தார். அதில் நான் இந்திய குடிமகனே அல்ல என குறிப்பிடப்படவில்லை. ஆனால், பெரா வழக்கில் தாம் இந்திய குடிமகனே அல்ல; சிங்கப்பூர் குடிமகன் வாதிட்டார் டி.டி.வி. தினகரன். 
 
அதேபோல் 1995 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது தன்னை இந்திய குடிமகன் என வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதே ஆண்டு பெரியகுளம் எம்.பியாக இருந்த போதும் நான் இந்திய குடிமகன் என்று கூறியுள்ளார். 
 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் மீண்டும் தினகரன் இந்தியன் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பெரியகுளம் எம்.பியாக இருந்த போதும் இப்போதும் நான் இந்தியன் தான். மார்ச் 22-ம் தேதியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி காணாமல் போய்விடும் என தினகரம் பதிலளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்