நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

Mahendran

புதன், 13 நவம்பர் 2024 (11:51 IST)
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை என்ற திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், மத்திய பள்ளி கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், இந்த அடையாள அட்டைக்கு மாணவர் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆதார், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் அபார் மாணவர் அடையாள அட்டை உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டைக்காக பெற்றோர்களை அழைத்து சம்மதம் பெற தலைமை ஆசிரியருக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் போன்றே அபார் என்ற தனி அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், இதில் 12 இலக்க எண் இருக்கும் என்றும், இது மாணவரின் வாழ்நாள் அடையாள அட்டையாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்