பச்சை பட்டு உடுத்தி உறங்குகிறார் இரும்பு பெண் ஜெயலலிதா!

செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:42 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இரும்பு பெண்மணி என பலராலும் புகழப்பட்ட ஜெயலலிதா பச்சை பட்டு உடுத்தப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளார்.


 
 
வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்ட ஜெயலலிதா எந்த சூழலில் முடங்கி விடாமால் மீண்டும் மீண்டும் வந்து எல்லா சவால்களையும் தாண்டு வெற்றி என்ற இலக்கை அடைந்தே தீருவேன் என அனைத்திலும் வென்று. மரணத்திடம் மட்டும் தோற்று ஆழ்ந்த நிரந்தர உறக்கத்தில் உள்ளார்.
 
75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா தனது போராட்டத்துக்கு ஓய்வு கொடுத்துள்ளார். அவரது உடல் அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மத சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் அவரது நிறம் என கூறப்படும் பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளார்.
 
சென்று வா வீர மங்கையே என தமிழக மக்கள் கண்ணிர் மல்க அவரை வழியனுப்ப தயாராக உள்ளனர். மாலை 4.30 மணிக்கு இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்தனை ஆண்டு கால போராட்ட வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டார் இறைவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்