கூகுளின் ’’BARD AI ’’ என்ற செயலி அறிமுகம்

வியாழன், 11 மே 2023 (18:01 IST)
இது செயற்கை நுண்ணறிவு காலம் என்று கூறப்படும் அளவுக்கு அனைத்துத்துறைகளிலும் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் நுழைந்துள்ளது.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சாட் ஜிபிடி உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக உலகின் முன்னணி நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதனால், மற்ற  தொழில்துறையைப் போன்றே இந்த ஏஐ தொழில் நுட்பத்திலும் போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் பிரேசிலிய – அமெரிக்க ஆராய்ச்சியாளர் மனிதர்களின் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இன்றைய நவீன இணையதள உலகில் முன்னணியில் உள்ள ஏஐ தொழில் நுட்பம்,. செயற்கை நுண்ணறிவின் மூலம், இன்று தனி நபர்களுக்குத் தேவையான விவரங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

நொடியில் அனைத்து விவரங்களைப் பெறும் வசதி கொண்டுள்ள நிலையில்,  சமீபத்தில் இந்த ஏஐ –ன் பிதாமகர் ஜெப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தைவிட்டு வெளியேறினார்.

இந்த ஏஐ –ன் பிதாமகர் ஜெப்ரி ஹிண்டனுக்கு 75 வயதாகும் நிலையில்,  இவரது வாழ்வு ஏஐ  இன் வளர்ச்சி மற்றும் பயன்பாடு பற்றிய அவரது தனிப்பட்ட  நம்பிக்கைகளால் இயக்கப்படுகிறது.  கூகுள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியில் இருந்த அவர்,  தன் வேலையை விட்டுவிட்டதாகவும், ஏஐ தொழில்  நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும்’’ என்று எச்சரித்தார்.

இந்த நிலையில்,  கூகுளின்  BARD AI  என்ற செயற்கை நுண்ணறிவு செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இச்செயலி ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், இதன் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்து, தற்போது  இந்தியா உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்