இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதலனை பார்க்க சென்ற 8ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

Prasanth Karthick
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (09:00 IST)

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி சமூக வலைதள நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்த நிலையில் அதன் மூலமாக திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.

 

சமூக வலைதளத்தில் ஏற்பட்ட இந்த பழக்கத்தின் மூலம் விக்னேஷ் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி திருவண்ணாமலைக்கு வருமாறு அழைத்துள்ளார். சிறுமியும் ஒருநாள் தனது தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை போலீஸார் தேடத் தொடங்கினர்.

 

சிறுமியிடம் அவரது தாயாரின் செல்போன் இருந்ததால் அதை ட்ராக் செய்து சிறுமியின் இருப்பிடத்தை கண்டறிந்து போலீஸார் மீட்டனர். விசாரணையில் விக்னேஷ் மற்றும் அவரது 5 நண்பர்கள் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிறுமி கூறியுள்ளார். அதன்பேரில் வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்