ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: - இந்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை..!

Mahendran

சனி, 13 ஏப்ரல் 2024 (12:03 IST)
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு இந்தியர்கள் தற்போதைக்கு செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறிவரும் ஈரான் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து ஈரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

இஸ்ரேயில் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் கூறி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது

 இந்த நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் இப்போதைக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது, இஸ்ரேல், ஈரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மறு அறிவிப்பு வெளியிடும் வரை இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்