இஸ்ரேலை அடிக்க போறோம்.. நீங்க ஓரமா ஒதுங்கி போயிடுங்க! – அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!

Prasanth Karthick

ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (11:26 IST)
இஸ்ரேலுக்கும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே சமீபமாக மோதல் எழுந்துள்ள நிலையில் ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்கனவே போர் நடந்து வரும் நிலையில் லெபனானில் இருந்து ஹிஜ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக லெபனான் எல்லைகளில் ஹிஜ்புல்லா மறைவிடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதேசமயம் ஹிஜ்புல்லாவுக்கு பின்னால் இருந்து ஈரான் இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.

சமீபத்தில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழிப்படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் மூத்த தளபதிகள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஈரான் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் வலையில் சிக்க வேண்டாம். அதில் இருந்து விலகி இருந்தால், நீங்கள் தாக்குதலில் இருந்து தப்புவிர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக சொல்லாததால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என பீதி எழுந்துள்ளது.

Edit by Prasanth.K


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்