உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு

செவ்வாய், 1 மார்ச் 2022 (08:20 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் இடையே கடந்த 6 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திடீரென சமையல் எண்ணெய் உயர்ந்துள்ளது
 
இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்துதான் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு போர் நீடித்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது
 
15 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் டின் உக்ரைன் போருக்கு முன்பு 2,150 எனவும் தற்பொழுதுரூ 2,525 எனவும் விற்பனையாகிறது.
 
சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130 க்கு விற்பனை ஆன நிலையில் தற்பொழுது ரூ.160 க்கு விற்பனையாகிறது
 
5 கிலோ எடை கொண்ட பாமாயில் டின் ரூ 1,900க்கு விற்பனையான நிலையில் தற்பொழுது ரூ.2,350 க்கு விற்பனையாகிறது.
 
தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கடலை எண்ணையும் ரூ 2,400 விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,600 க்கு விற்பனையாகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்