கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி: பெட்ரோல் விலை குறைந்ததா?
புதன், 16 மார்ச் 2022 (08:18 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 99 டாலருக்கும் குறைவாக தற்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த இந்தியாவில் இனியும் உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்று விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.