சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என கடந்த 5 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
ஜெயா தொலைக்காட்சி, தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் என 215 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனை செய்து வந்தனர்.
இதனையடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவா் சிவக்குமார், விவேக் ஜெயராமன் என மூன்று பேரையும் ஒரே இடத்தில் வைத்து வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.