ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் வருமான வரித்துறை பிடியில்: டெல்லியில் கிடுக்குப்பிடி விசாரணை!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (20:07 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவரது உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் என்பவர். போயஸ் கார்டனில் இவரை தாண்டி தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும்.


 
 
இந்த பூங்குன்றனிடம் 350 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாகவும், அவை எப்படி வந்தது, யாருக்கு சொந்தமானது என டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பூங்குன்றன் அசைக்க முடியாத சக்தியாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக வலம் வந்தார். இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பல நிறுவனங்களுக்கு இயக்குனராக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்த வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவருக்கு 350 கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி வந்தது என துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த சொத்துக்கள் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா? சசிகலாவுக்கு சொந்தமானதா? பினாமியாக எழுதி வைக்கப்பட்டதா என அதிகாரிகள் அதிரடியாக விசாரித்து வருகின்றனர் என பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்