தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காரைக்குடியில்அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
இன்றைய பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது;
தமிழ் நாட்டில் அதிமுக - திமுக என 2 கட்சிகளுக்குத்தான் போட்டியுள்ளது. வறட்சியான மாவட்டத்தைப் பசுமையாக்க ரூ.14 000 கோடியில் திட்டத்தை அமல்படுத்தினேன். காவிரி - குண்டாறு திட்டத்தை, திமுக அரசு முடகிவிட்டது. திமுகவிற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். திமுக- காங்கிரஸ்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என்று கூறினார்.
மேலும், கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அதிமுக - 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை பார்த்து வந்த கட்சி பாஜக. மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 3 வேட்பாளர்களை களத்தில் நிறுத்திய கட்சி அமுக என்றும், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரவில்லை எனவும், மீனவர்களின் வாக்கைப் பெறுவதற்காகவே பாஜக கச்சத்தீவு பற்றி பேசி வருவதாக விமர்சித்துள்ளார்.