செல்லாத பணத்துக்காக சாகித்ய அகாடமி வாங்கிய இமையம்!

வெள்ளி, 12 மார்ச் 2021 (17:03 IST)
இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி இந்த முறை எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் நாட்டுப்புற வட்டார வழக்குகளில் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். பள்ளி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்து வரும் இவர் முன்னதாக எழுதிய “பெத்தவன்” சிறுகதை நாடகமாகவும், குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் எழுதிய செடல், வீடியோ மாரியம்மன், சாவு சோறு உள்ளிட்ட நாவல்கள் தமிழக இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றவை.

இந்நிலையில் இவர் அண்மையில் எழுதிய “செல்லாத பணம்” நாவல் தமிழில் சிறந்த நாவலுக்கான 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்