கடந்த 2013 ஆம் ஆண்டு தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்த இளவரசன் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர், இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரம் இல்லை, ஆனால் அவர் கண்டிப்பாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும் என ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜூலை 5-ம் தேதி 2013-ம் ஆண்டு, இளவரசன் இறந்து ஒரு நாள் கழித்து, மருத்துவர் துந்தர் மற்றும் நான் ஜூலை 11-ம் தேதி செய்த பிரேத பரிசோதனை ஆகிய இரண்டிலும் அவர் உடம்பில் க்ரீஸ் கரை என்பது இல்லை. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜூலை 13-ம் தேதி மேற்கொண்ட பிரேத பரிசோதனையின்போது, இளவரசன் உடலில் க்ரீஸ் கரை தோன்றுகிறது.
இளவரசன் கொலை செய்யப்பட்டாரா என்பதற்கு எங்களிடம் தற்போது போதிய ஆதாரம் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை நிரூபிக்க முடியும், என கூறியுள்ளார்.