ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பது எப்போது?

வெள்ளி, 3 மார்ச் 2023 (15:26 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் வரும் பத்தாம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது என்பதும் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஒரு லட்சத்து பத்தாயிரம் வாக்குகள் பெற்று சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி ஏற்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய இளங்கோவன் பதவி ஏற்பு தேதி குறித்த அறிவிப்பை சட்டப்பேரவை தலைவர் உறுதி செய்வார் என குறிப்பிட்டார். 
 
இருப்பினும் அவர் மார்ச் 10ஆம் தேதி பதவி ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாக சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்