ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது: ஈபிஎஸ் கண்டனம்..!

வியாழன், 2 மார்ச் 2023 (19:22 IST)
ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை அரங்கேறியுள்ளது என திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார் என்பதும் இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக அரங்கேற்றி உள்ளது என்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக இருந்ததாக தான் தோல்வி அடைந்துள்ளது என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்