ஐஐடி மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் இறக்கவில்லை! – மருத்துவ ஆய்வில் தகவல்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:43 IST)
சென்னை ஐஐடியில் மான்கள் வரிசையாக உயிரிழந்த நிலையில் அவற்றிற்கு ஆந்தராக்ஸ் நோய் இல்லை என மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சில தினங்கள் முன்னதாக ஐஐடி வளாகத்திற்குள் மான் ஒன்று இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அடுத்த நாளில் மேலும் மூன்று மான்கள் உயிரிழந்தன. மான்கள் ஆந்தராக்ஸ் நோய் பாதித்து இறந்திருக்கலாம் எனவும், இந்த நோய் நாய்கள் மூலமாக பரவி இருக்கலாம் எனவும் சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இறந்த மான்களின் மாதிரிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைகலகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையில் மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் இறக்கவில்லை என தெரியவந்துள்ளது. மர்மமான முறையில் மான்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்