தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நடலாம்..! தேமுதிகவிற்கு சத்யபிரத சாஹு விளக்கம்..!

Senthil Velan

வியாழன், 6 ஜூன் 2024 (15:17 IST)
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி உள்ள நிலையில் தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை, சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.  வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவித்த அவர், விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறை.! ஆளுநர் தலையிட ஜெகன்மோகன் வலியுறுத்தல்..!!

இருப்பினும்  விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது தொடர்பாக தேமுதிகவின் எந்தப் புகாரும் இதுவரை கிடைக்கவில்லை என்று சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்