நாம் கட்சி தலைவர் சீமான் எப்பவும் எதிலும் காரசாரமாக பேசுபவர். சென்னையில் நடைபெற்ற பட விழாவில் மாடு வளர்க்காமல் நெய் தோசை கேட்கும் படித்த இளைஞர்களின் நாக்கை அறுத்து போட வேண்டும்என அவர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
சென்னையில் நடைபெற்ற பட விழாவில் கலந்து கொண்ட சீமான் கூறியதாவது:
படித்த இளைஞர்களுக்கு பால், நெய், பிடிக்கும், முக்கியமாக தோசையில் நெய் அதிகம் விட்டால் தான் அவர்கள் சாப்பிடுவர். அப்படி இருக்க ... மாடு வளர்க்காமல் அதிலிருந்து பெறப்படும் நெய் என்ன குழாயிலிருந்தா கிடைக்கும். மாடு வளர்ப்பது அசிங்கம் என்று அதை வளர்க்க மாட்டார்கள் இளைஞர்கள். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் நெய் ஊற்றிய தோசை மட்டும் கேட்கிறார்கள். அப்படி இனி யாராவதும் நெய் தோசை கேட்டால் அவர்களின் நாக்கை அறுத்து போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சினிமாவில் நடிகர்கள் ஆவேசமாக பேசிவிட்டு ’தெருவில் நடந்து போகும் போது தெரியாமல் கூறிவிட்டேன் என்று கூறினால் அவர்கள் ஹீரோ அல்ல ஜீரோ ’ இவ்வாறு அவர் பேசியுள்ளது கடும் சர்சையை கிளப்பி உள்ளது.