கூட்டம் முடிந்து பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது என்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 12-ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு, மறுநாள் 12-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டால் அன்றைய தேதியில் பொதுத்தேர்வு இருக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.