தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ்..! ராதாகிருஷ்ணன் தகவல்..!!

Senthil Velan

வெள்ளி, 29 மார்ச் 2024 (14:57 IST)
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தல் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறினார்.
 
தமிழகத்தில் அடுத்த மாதம் (19-ந் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
 
இந்த தேர்தல் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ALSO READ: தொழில் நகரத்தை முடக்கிய மத்திய மாநில அரசுகள்..! திருமதி பிரேமலதா..!!
 
இந்நிலையில் சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தல் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்