மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதா?… அதிர்ச்சி தகவல்!

vinoth

வியாழன், 28 மார்ச் 2024 (13:04 IST)
ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில்நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை போராடி துரத்தினாலும் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை நியமித்ததில் இருந்தே அந்த அணிக்குள் சுமூகமான சூழல் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. ஹர்திக்கிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது குறித்து ரோஹித், பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மும்பை அணி இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் தலைமையில் பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டவர்கள் ஒரு குழுவாகவும், பாண்ட்யா தலைமையில் இஷான் கிஷான் உள்ளிட்டவர்கள் ஒரு குழுவாகவும் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் ஹர்திக்கின் குழுவுக்கு அணி உரிமையாளர்கள் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்