சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன்?'' என்று சீமான் ஆவேசம்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:36 IST)
''வந்தவர் போனவர் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன்?'' என்று சீமான் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்.  இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து,   சமீபத்தில்   சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிரிஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் ‘’என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று சிறுபான்மையினர் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சீமான், '' பிள், குரான் உன்னை சாத்தான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாய். நான் கூறினான் ஏற்க மாட்டியா? அப்படியென்றால்  உங்களைவிட நான் ஆழ்ந்து பைபிள், குரானை படித்துள்ளேன் என்று தானே அர்த்தம். இஸ்லாம், கிருஸ்தவன் இரண்டும் அநீதிக்கு எதிராகப் பிறந்தது. இந்த நாட்டில், மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சிகள் அப்படி சகித்துக் கொள்கிறீர்கள்...அன்று 58  நிமிடங்கள் அக்கறையோடு பேசினேன். 2 செகன்ட் பேசியது சர்ச்சையானதா?   மதத்தைவிட, சாதியைவிட மொழி, இனம் தான். அப்படி என்றால் இங்கிருக்கும் கிருஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவர் போனவர் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன்? என்று சொல்லுகிறேன். எதற்காக சிறுபான்மையினர் என்று கூறுகிறீர்கள்?'' என்று ஆவேசமாகப் பேசினார்.
அடுத்த கட்டுரையில்