நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன்: ஜெ.தீபா பரபரப்பு பேச்சு!

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (19:18 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தான் ஜெயலலிதாவின் அடுத்த அரசியல் வாரிசு என அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். இதனையடுத்து ஜெ.தீபாவும் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை என பேசப்படுகிறது. இதனால் அவர்கள் தீபாவை தலைமையாக ஏற்று ஆதரவளித்து வருகின்றனர்.
 
சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டின் முன் குவியும் அவரது ஆதரவாளர்கள் அவரை தொடர்ந்து அரசியலில் இறங்க வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து தீபா தான் அரசியலில் இறங்க இருப்பதை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் அன்று உறுதிசெய்தார்.
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் எனவும் புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்நிலையில், தி.நகரில் உள்ள தனது வீட்டின் முன் கூடிய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களின் மத்தியில் இன்று ஜெ.தீபா பேசினார்.
 
அப்போது பேசிய அவர், தேவையற்ற கருத்துக்களை பரப்புவோரை நம்ப வேண்டாம் எனவும், எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் மீறி அரசியலுக்கு வருவேன். என்னை நம்பி வந்தவர்களை எந்த காலத்திலும் கைவிட மாட்டேன் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்